புதுடெல்லி: மத்திய அரசின் பட்ஜெட் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில் இந்த பட்ஜெட் உரை இறுதிகட்ட திருத்தம் நிறைவு அடைந்துள்ளது.
நாளை (பிப்.1) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், ஒன்றிய நிதி மற்றும் கார்பரேட் விவகாரங்கள் துறைக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் உரையில் இறுதிகட்ட திருத்தப் பணிகளை நிறைவு செய்துள்ளார்.
இந்நிகழ்வின்போது, மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் செயலாளர்களும் உடனிருந்தனர். நாளை காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசிக்கவுள்ளார்.