சென்னை: மத்திய பட்ஜெட் ஏழைகளை ஏமாற்றும் கானல் நீர் போன்றது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
உலகில் 5 நாடுகளில் 20 கோடிக்கும் கீழாக மக்கள் தொகை உள்ளது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 15 சதவீதம் பேர், அதாவது 20 கோடிக்கு மேல் மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். அவர்களுக்கான எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. ஆனால் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டு விட்டதாக ஏமாற்றுகிறார்கள். இந்த பட்ஜெட் கானல் நீரைப் போன்றது. தண்ணீர் இருக்கிறது என்று நினைத்து போனால் ஏமாந்து போய்விடுவார்கள். அதே போலத்தான் மக்களை ஏமாற வைத்துள்ளார்கள்.
பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிதி எதுவும் கொடுக்காமல் மத்தியில் பிரிவினை வாதங்களை பேசி ஏமாற்றி அரசியல் செய்வது. இது தான் மோடி அரசு. இவ்வாறு அவர் கூறினார்.