சென்னை: எங்கள் கூட்டணிக்கு விஜய் வந்தாலும், இ.பி.எஸ். தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று நடிகை கெளதமி தெரிவித்தார்.
அதிமுக 54 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை காசிமேட்டில் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான கௌதமி கலந்துகொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தாலும் இ.பி.எஸ். தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றார்.