கர்நாடகா: கர்நாடக அரசியல் அரங்கில் ஒரு பரபரப்பு எழுந்துள்ளது. முதல்வர் சித்தராமையா மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் மீண்டும் செய்தி அடிபடுகிறது.
3 நாள் பயணமாக டெல்லி சென்ற சித்தராமையாவை, ராகுல் காந்தி சந்திக்க விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. சித்தராமையாவுக்கு 76 வயதாவதால், டிகே சிவக்குமாரை முதல்வர் ஆக்கினால் கட்சி உயிர்ப்புடன் இருக்கும் என ராகுல் கருதுகிறாராம்.
இதில் சித்தராமையாவுக்கு விருப்பமில்லை. எனினும், விரைவில் கர்நாடகா மாநில அரசியலில் முதல்வர் மாற்றம் ஏற்படலாம் என்று தெரிவிக்கின்றனர். இதனால் சித்தராமையா மிகவும் அதிருப்தியில் உள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.