புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி பொதுமக்களை மத்திய அரசு கொள்ளையடித்து வருவதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. மேலும் அரசின் கொள்கைகள் தனியார் நிறுவனங்களுக்கு எப்படி பலன் அளித்தன என்பதை மத்திய தணிக்கை குழு (சிஏஜி) ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதில் வேண்டுமென்றே அலட்சியமாக இருந்ததா அல்லது இதில் ஏதாவது சதி இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்திய மக்கள் சுரண்டப்படுகிறார்கள். ஒருபுறம் வரிச்சுமையை அதிகரித்து மக்களை சுரண்டிக்கொண்டிருக்கும் மோடி அரசு, மறுபுறம் அரசும், எண்ணெய் நிறுவனங்களும் அதிக லாபம் ஈட்டுகின்றன. இது ஒரு தெளிவான பொருளாதாரச் சுரண்டல்.