கரூர்: கரூரில் விஜய் பிரச்சாரத்திற்கு சென்று கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த தனது மகள் மற்றும் மனைவியை கண்டு கணவர் கதறி அழுதது பெரும் ோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்யை பார்த்துவிட்டு வருகிறேன் என என் மனைவியும் மகளும் சொல்லிவிட்டு சென்றனர். போன் செய்தபோது எடுத்து விஜய்யை பார்த்துவிட்டு வருகிறோம் என்று கூறினர். ஆனால் விஜய் வந்து வெகுநேரமாகியும் நான் போன் செய்தும் எடுக்கவில்லை. திரும்பவும் போன் செய்த போது ஒரு போலீசார் எடுத்து போனை விட்டு விட்டு சென்றுள்ளனர்.
கூட்ட நெரிசலில் பலரும் சிக்கி விட்டனர். மருத்துவமனைக்கு சென்று பாருங்கள் என்று தெரிவித்தார். பிறகு மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது என் குழந்தை இறந்து கிடந்தாள். மனைவியாவது இருப்பாரென நினைத்தேன், ஆனால் இறந்துவிட்டார் என்று மனைவியையும், மகளையும் இழந்த அவர் கதறி அழுதார்.