சென்னை: இன்று முதல் மேற்ொள்ளப்படும் பிரசாரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரக்கூடாது என்று தன் கட்சித் ொண்டர்களுக்கு தவெக கட்சித்தலைவர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தவெக கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் தொடங்கி அடுத்தடுத்து உங்களை சந்திக்க, உங்களுக்காகவே குரல் கொடுக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வருகிறேன்.
பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி இந்த சந்திப்பை நடத்த காவல்துறை அளித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்ட பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.