திருச்சி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் அமமுக பங்கேற்கும். தமிழக சட்டப் பேரவையில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சி அதிமுக. ஆனால் மக்கள் மன்றத்தில் இவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?
பழனிசாமி திமுகவுக்கு பயந்து பேச்சை அடக்குகிறார். நீதிமன்ற உத்தரவுப்படிதான் சீமான் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. அரசு அதிகாரிகளை அவதூறான வார்த்தைகளில் பேசிய திமுக மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகளின் எண்ணங்களையும் அணுகுமுறையையும் வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்.