திண்டுக்கல்: வீட்டில் இருந்து கொண்டு அரசியல் செய்வது தவெக தலைவர் விஜய்யின் ஸ்டைல் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். திண்டுக்கல்லில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று அளித்த பேட்டி:- அதிமுக வலுவிழந்தால் பாஜக இரண்டாம் இடத்திற்கு வரும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. தேர்தல் நேரத்தில் அதிமுக கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். ஒவ்வொருவருக்கும் அவரவர் பாணி உண்டு. வீட்டிலிருந்து அரசியல் செய்வது தவெக தலைவர் விஜய்யின் ஸ்டைல். அதை விமர்சிக்கவே முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், தவெகவுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, “எந்தவித கணிப்பும் செய்ய முடியாது. தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும்” என்றார்.