சென்னை: தி.மு.க கூட்டணி ஒட்டுப்போட்ட கூட்டணி என்று தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் ஓட்டலில் த.வெ.க. வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. வேட்பாளர்கள் அறிமுகத்திற்கு முன்பாக த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்தது போல கிழிந்த துணியை தைத்தது போன்ற ஒட்டுப்போட்ட கூட்டணி தி.மு.க. கூட்டணி. உடைந்ததை ஒட்டுவது போல், கிழிந்ததை தைப்பதை போல் ஸ்டாலின் சார் கூட்டணி ஒட்டுப்போட்ட கூட்டணி.
மக்கள் பணத்தை எடுக்க மாட்டேன், பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன். ஊழல் கறை படியவிடமாட்டேன், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன்.
உங்கள் குரல் கேட்டால் ஓடி வருவது மட்டுமல்ல, நீங்கள் குரல் கொடுப்பதற்கு முன்பே வரும் ஒருவரை தான் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஊழலில் ஊறிப்போனவர்களுககு ஊழலுக்கு எதிரானவர்களுக்குமான தேர்தல்.
மக்கள் பணத்தை சுரண்ட மாட்டேன் என்று இன்று வேட்பாளர்கள் கொடுத்தது உறுதி மொழி அல்ல, உத்தரவாதம் என்றார். முன்னதாக வேட்பாளர்காளக தேர்வு செய்தவர்களை உறுதி மொழி ஏற்க வைத்தார்.