சென்னை: தவெகவின் ஆதவ் அர்ஜுனா திமுகவின் “ஸ்லீப்பர் செல்” என்று ஜோஸ் சார்லஸ் மார்டின் விமர்சனம் செய்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா திமுகவின் “ஸ்லீப்பர் செல்” என்றும், திமுகவில் உதயநிதிக்கு எதிராக உள்ள சில நபர்களுக்காக அவர் வேலை செய்து வருவதாக லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், லாட்டரி அதிபர் மகனுமான ஜோஸ் சார்லஸ் மார்டின் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆதவ் அர்ஜூனா தவெகவிற்கு சென்றிருப்பதே ‘ஸ்லீப்பர் செல்’ வேலையைச் செய்வதற்காகத் தான்.
விஜய்க்கு எதிரான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி மக்களிடையே தவறான செய்தியை பரப்ப முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.