சென்னை: தயவு செய்து இன்னும் ஆறு மாத காலத்திற்கு கூட்டணி பற்றி எந்த கேள்வியும் கேட்காதீர்கள். இன்னும் ஆறு மாதங்களுக்கு பிறகு தான் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கும் என்று பாஜக தமிழிசை தெரிவித்துள்ளார்.
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று கேட்கப்பட்டதற்கு இன்னும் ஆறு மாத காலம் பொறுத்திருங்கள் அதன் பிறகு கூட்டணி பற்றி அறிவிக்கிறேன் என்று கூறினார்.
அதன் பிறகு அண்ணாமலையும் அதிமுக தங்களுக்கு எதிரி கிடையாது என்று கூறியுள்ளார். இதனால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வைப்பதாக கூறப்படும் நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பாஜகவுடன் கூட்டணி வைக்க கட்சிகள் தவம் கிடப்பதாக கூறினார்.
அவர் அதிமுகவை தான் அப்படி சொன்னதாக கூறப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலை அதிமுகவை பற்றி அப்படி விமர்சிக்கவில்லை என்றார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை தமிழிசை சவுந்தர்ராஜனிடம் இது பற்றி நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் கூட்டணி தொடர்பாக தேசிய தலைமை மட்டும் தான் முடிவு செய்யும். தமிழக பத்திரிகை நண்பர்களிடம் நான் ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன். தயவு செய்து இன்னும் ஆறு மாத காலத்திற்கு கூட்டணி பற்றி எந்த கேள்வியும் கேட்காதீர்கள். இன்னும் ஆறு மாதங்களுக்கு பிறகு தான் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கும். மேலும் தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தேசிய தலைமை கையில் தான் கூட்டணி குறித்த முடிவுகள் இருக்கிறது என்றார்.