சென்னை: சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலின் போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இதுவரை 90 சதவீத மனுக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி வாரியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ளன.
அவர் தனது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. தற்போது தேர்தல் ஜுரம் வந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏதேதோ உளறி கொண்டிருக்கிறார். அதற்கெல்லாம் கவலைப்படாமல், முதல்வர் வழியில் தொடர்ந்து மக்கள் பணிகளில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.