சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி அ.தி.மு.க உண்ணாவிரதம் மேற்கொண்டது.
கள்ளக்குறிச்சி விவகாரத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரித்தால் உண்மை வெளியே வராது என்பதால்தான் சிபிஐ விசாரணை கோருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய இபிஎஸ், பேரவையில் அமைச்சர்கள் பேசுவதை விட சபாநாயகர் அதிகமாக பேசுவதாக விமர்சித்தார்.