காரைக்குடி: காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜாவின் பிறந்தநாள் விழாவை கட்சியினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
விழாவில் பங்கேற்ற பின், எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தி.மு.க.,வில் பணியாற்றியவர்களுக்கு, தலைமைப் பதவியில் இடம் கிடைக்காது. கருணாநிதி குடும்பத்தைத் தவிர வேறு யாரும் கட்சியில் தலைமைப் பதவிக்கு வர முடியாது என்பதை உதயநிதியை துணை முதல்வராக்கியதில் இருந்தே தெரிகிறது.
செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றத்தால் நிச்சயம் தண்டனை கிடைக்கும். அவர் மீதான விசாரணை நிலுவையில் இருக்கும் போதே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாஜகவில் எப்போதும் மோடி அணி மட்டும் தான்.
திமுகவும் அதிமுகவும் எங்களுக்கு ‘பி’ டீம் ஆகக் கூடாது. தமிழகத்தில் தினமும் கொலைகள் நடக்கின்றன. சந்திப்பு மட்டும் பெரிதாகவில்லை. போலீஸ் விசாரணை செய்பவர் கூட கொல்லப்படுகிறார். திமுக ஆட்சியில் மக்களின் ஒழுக்கம் கெட்டுவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.