தஞ்சாவூர்: சீமானுக்கு ஆதரவாக களமிறங்கினார் எச்.ராஜா. எப்படி தெரியுங்களா?
சீமான் வீட்டில் நடந்த சம்பவத்திற்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். சம்மனை வீட்டில் ஒட்டிவிட்டு போக வேண்டியது தானே?, அதன்பிறகு வீட்டிற்குள் எதற்கு போக வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், ஈ.வே.ராமசாமியின் பொய் உருவத்தை சீமான் சிதைத்துக் கொண்டு இருக்கிறார்.
இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் ஈவேராவின் கைகூலிகள் இந்த மாதிரியான மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று விமர்சித்துள்ளார்.
கடந்த இரண்டு நாள் முன்பு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை நடிகை விஜயலட்சுமி தெரிவித்த பாலியல் புகார் அடிப்படையில் விசாரிப்பதற்காக சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த சம்மனை சீமான் வீட்டில் ஒட்டும்போது அவர் வீட்டு செக்யூரிட்டி துப்பாக்கியை காட்டி போலீசாரை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இதை எடுத்து சீமான் போலீசார் விசாரணைக்கு ஆஜராகி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வீடு திரும்பினார்.
இந்த சம்பவத்தில் சீமானுக்கு ஆதரவாக முதல் முறையாக பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.