தஞ்சாவூர்: மொழிப்போர் தியாகி தினத்தை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மொழிப்போர் தியாகி தினம் நேற்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளரும் திருவையாறு எம்எல்ஏவான துரை சந்திரசேகரன் தலைமையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, தஞ்சை எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம், தஞ்சை மாநகராட்சி மேறும் தஞ்சை மாநகரம் செயலாளருமான சன்.ராமநாதன், மாநில மருத்துவர் அணி துணை செயலாளரும் துணை மேருமான அஞ்சுகம் பூபதி, மாவட்ட துணைச் செயலாளர் கனகவல்லி பாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் முகில் வேந்தன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆசாத் மகேந்திரன், கோட்ட தலைவர்கள் புண்ணியமூர்த்தி, மேத்தா, ரம்யா சரவணன், பகுதி செயலாளர்கள் கார்த்தி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.