மதுரை: எதிர் கட்சியினர் கூட்டம் நடத்தும் போது மட்டும் ஏன் ஆம்புலன்ஸ்கள் வருகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, விஜய் போன்ற எதிர்கட்சியினர் கூட்டம் நடத்தும் போது மட்டும் வரும் ஆம்புலன்ஸ்கள் முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் இடங்களுக்கு ஏன் வருவதில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரை சோழவந்தானில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், கரூர் துயர சம்பவம் குறித்து வலைதளங்களில் அவதூறு பரப்ப வேண்டாம் என்று முதலமைச்சர் கூறுவதை குறிப்பிட்டு, கருத்து சொல்லக் கூடாது என்றால் இது ஜனநாயக நாடு தானா என வினவியுள்ளார்.