கொழும்பு: அரச ஊழிர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க ஊழியர் சம்பள அதிகரிப்பு முன்மொழிவு சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றமில்லாமல் இருக்கும் என வெகுசன ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன (தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எந்த அரசாங்கமாக இருந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளின் அடிப்படையிலான கருத்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
வரவு செலவுத் திட்டத்தில் இந்த சம்பள அதிகரிப்பு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் அது அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றுள்ளது.
அமைச்சரவைப் பத்திரங்கள் இரகசியமானவை அவை வெளியே கொண்டு செல்லப்படுவதில்லை அவற்றின் பிரதிகள் அமைச்சின் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
நான் அமைச்சரவை பேச்சாளராக பணியாற்றுகிறேன். அந்தச் செயற்பாடுகளில் ஊடகவியலாளர்களும் பொறுப்புடன் செயற்பட்டனர்.