புதுடில்லி: உக்ரைனில் அமைதியை வலியுறுத்துகிறது இந்தியா. ஆனால் உக்ரைனுக்கு 125 மில்லியன் டாலர் ஆயுதம் வழங்குகிறது அமெரிக்கா.
உக்ரைன் அதிபருடன் நடந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி அமைதியை வலியுறுத்திய நிலையில், ரஷ்யாவை எதிர்த்து போரிடுவதற்காக உக்ரைனுக்கு 125 மில்லியன் டாலர் மதிப்பில் கூடுதல் ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
ட்ரோன் எதிர்ப்பு மற்றும் கவச வாகன எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்கள் மற்றும் வீரர்களுக்கான ஆயுதங்கள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார்.
இந்த ஆயுத உதவியை வரவேற்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூடுதல் ஆயுதங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியாவோ உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறது. இரு நாடுகளின் எண்ணத்தில்தான் எவ்வளவு வித்தியாசங்கள் என்று நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.