சென்னை: அதிமுக-பாஜக கூட்டணி 4 மாதங்கள் கூட நீடிக்குமா என்று தெரியவில்லை என்று சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார். அதில், செங்கோட்டையன் டெல்லி சென்றபோது, பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்தார்.

திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். திடீரென எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார்; பின்னர் சென்னை வந்த அமித்ஷா பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று கூறி வந்த எடப்பாடி பழனிசாமி திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.
அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசவில்லை. செங்கோட்டையன் டெல்லி சென்றதும் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். 2026 சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். பா.ஜ.க.வை வீழ்த்தும் வகையில் அதிமுக கூட்டணியை அறிவித்துள்ளது.