நியூயார்க்: காசா போர் நிறுத்த புதிய பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தர்கள் தயாராகின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஹமாஸ் அமைப்பினர குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 10 மாதங்ளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட்டு காசாவில போர் நிறத்தத்தை கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்கள். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்தும்போதெல்லாம் காசா மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்துவை சுட்டிகாட்டு தடைபட்டு வருகிறது.
இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கான புதிய பேச்சுவார்த்தை முன்னெடுத்து வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாட்டின் அதிகாரிகள் இஸ்ரேல் அதிகாரிகளுடன் இன்று கத்தாரில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையால் காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராக இருக்கும் நிலையில் அதை கட்டுப்படுத்த முடியும் என மத்தியஸ்தர் நாடுகள் நம்புகின்றன.