சென்னை: எந்த அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டது என்பதை ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும் அப்படி செய்தால் நேருக்கு நேர் பாஜக தலைவர் அண்ணாமலையுடன் விவாதிக்க நான் தயார்” என அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நான்கு ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசு மீது குற்றம்சாட்டி இருந்தார்.
இதுகுறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், “எந்த அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டது என்பதை ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும் அப்படி செய்தால் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார்” என கூறியுள்ளார்.