புதடில்லி: மை டியர் ப்ரண்ட் டிரம்ப் என்று பிரதமர் மோடி உருக்கத்துடன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அமெரிக்காவுக்கு வாருங்கள் என்று அதிபர் டிரம்ப், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளாராம்.
அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்ற டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது 2 பேரும் மேற்காசிய நிலவரம், உக்ரேன் போர் உள்ளிட்டவை குறித்து நேற்று பேசினர்.
உலக அமைதி, அபிவிருத்தி, பாதுகாப்புக்காக இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டனர். இது தொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “டிரம்ப் MY DEAR FRIEND என மோடி குறிப்பிட்டு, பரஸ்பர நன்மை மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று திரு மோடி கூறினார். நமது மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் இணைந்து செயல்படுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இரு நாட்டு தலைவர்களும் மேற்கு ஆசியா மற்றும் உக்ரைனின் நிலைமை உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் உலகளாவிய அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு ஒன்றாகச் செயல்படுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, பிரதமர் மோடி, அடுத்த மாதம் அமெரிக்கா வந்து தன்னை சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இருவரும் நேற்று தொலைபேசியில் உரையாடியதைத் தொடர்ந்து, அவர் இதை கூறியுள்ளார். புளோரிடாவில் இருந்து ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணிக்கும் பொழுது, டிரம்ப் செய்தியாளர்களிடம் இத்தனை கூறியுள்ளார்.