சென்னை : மாநில உரிமைகளை காக்க போராடிய தமிழக அரசுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கு எதிராக மாநில உரிமைகளைக் காக்க வழக்காடிய தமிழக அரசுக்கு இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய எல்லா தளங்களிலும் வேலை செய்துவரும் பாஜகவின் சர்வாதிகார சூழலில் சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய தீர்ப்பு நம்பிக்கை தருவதாகவும், ஆளுநர்களை எல்லாம் கண்டிக்கும் விதமாக தீர்ப்பு அமைந்திருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் மசோதாக்களை நிறைவேற்றாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து தமிழக ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.