சென்னை: எம்.ஜி.ஆர். பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் யாராலும் ஆட்சி நடத்த முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆர். பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் யாராலும் ஆட்சி நடத்த முடியாது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லை. நாம் தாம் வாரிசு. நான் என்ன மிட்டா மிராசா, தொழிலதிபரா? சாதாரண தொண்டன். கட்சிக்கு உழைத்து, விஸ்வாசமா இருந்தா கதவ தட்டி பதவி கொடுக்குற கட்சிதான் அ.தி.மு.க. சட்டசபை தேர்தலில் 522 அறிவிப்பை வெளியிட்ட தி.மு.க. அரசு, அதில் 20 சதவீத அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.