தமிழ்நாடு வெற்றி கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டது. குறிப்பாக விக்கிரவாண்டியில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.
பின்னர் அந்த இடத்திற்கான அனுமதி கடிதத்தை காவல் நிலையத்தில் பொதுச்செயலாளர் புஸ்சி வழங்கினார். எனினும் மாநாடு தொடர்பில் போலிஸ் திணைக்களம் சந்தேகங்களை எழுப்பியிருந்தது.
கிட்டத்தட்ட 21 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்ட பின்னரே மாநாட்டுக்கு காவல் துறை ஒப்புதல் அளித்திருந்தது.
ஆனால், எல்லாம் ஒன்றுகூடி வரும் நிலையில், இவ்வளவு குறுகிய காலத்தில் மாநாட்டை நடத்த முடியுமா என்ற கேள்வி கட்சிக்குள் எழுந்தது. இது தொடர்பாக சமீபத்தில் நடந்த ஆலோசனையில் கூட இம்மாதம் மாநாட்டை நடத்த வேண்டும் என தலைவர் விஜய் உறுதியாக கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் மாநாடு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்து கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். அவர்கள், “இன்னும் 11 நாட்கள்தான் இருக்கிறது. அதற்குள் மாநாட்டுக்கான ஏற்பாட்டை முடிப்பது கடினம். மேலும், காவல் துறை தரும் நிபந்தனைகளுக்கு ஏற்ப பணியை முடிப்பது கொஞ்சம் கூட முடியாத காரியம்.
குறிப்பாக மாநாடு நடக்கும் பகுதியில் வாகனங்களை நிறுத்துமாறு காவல் துறையினர் கேட்டுக் கொள்கின்றனர். ஒரு பகுதியில் 55,000 இருக்கைகள் மற்றும் வாகன வசதிகளை ஏற்பாடு செய்ய முடியாது.
இந்த தடை மாநாட்டு தேதி மாற்றத்திற்கு சிக்கலாக இருப்பதாக கூறுகின்றனர். எனவே, மாநாட்டை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகின்றனர்.
கட்சியின் முதல் மாநாடு என்பதாலும், கட்சியின் கொள்கை விளக்கங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதால், ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு நடைபெறும் தேதி ஒத்திவைக்கப்பட்டால், மாநாட்டுக்கான ஒப்புதல் கடிதம் மீண்டும் காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்படும்.
மாநாடு நடைபெறும் தேதியை கட்சி தலைமை விரைவில் அறிவிக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.