புதுடில்லி: பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் வரும் 4-ந்தேதி ஆலோசனை நடத்துகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைத்து விரைவில் ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இதையொட்டி நாளை மறுநாள் (புதன்கிழமை) பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்திய பிறகு மத்திய மந்திரிகளை பிரதமர் மோடி சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த கூட்டத்துக்கு வரும் மத்திய அமைச்சர்கள் தங்களது துறையின் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், நிலுவையில் இருக்கும் பிரச்சனைகள் போன்றவற்றை தயாராக எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனவே பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் துறை ரீதியாக மிக விரைவான ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.