சென்னை : சாலையோர வியாபாரிகளுக்கு நடந்து சென்று நிழற்குடை வழங்க தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தொண்டர்கள் கோபம் அடைந்தனர்.
சென்னை தியாகராய நகரில் சாலையோர வியாபாரிகளுக்கு நடந்து சென்று நிழற்குடை வழங்க தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்த் முயன்றார்.
ஆனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுமென கூறி போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் தவெக தொண்டர்கள் அதிகளவில் சூழ்ந்ததில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
பின்னர் அவர் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்து தொண்டர்கள் தரப்பில் தெரிவிக்கையில், கோடைகாலம் வர உள்ள நிலையில் சாலையோர வியாபாரிகளின் நிலையை உணர்ந்து தவெக சார்பில் குடை அளிக்க முயன்ற பொதுச் செயலாளர் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தனர்.