அமெரிக்கா: முதல் முறை வீடு வாங்குவோருக்கு ரூ.20 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கும் கமலா ஹாரிஸ் வாக்குறுதி அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 2 மாதங்களே உள்ள நிலையில், டிரம்பும், கமலா ஹாரிஸும் போட்டிபோட்டுக்கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துவருகின்றனர்.
தாம் வெற்றி பெற்றால், முதல்முறை வீடு வாங்குவோருக்கு 20 லட்ச ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என கமலா ஹாரிஸ் அறிவித்திருந்த நிலையில், டிரம்போ, தாம் வெற்றி பெற்றால், அரசு நிலங்களில் மலிவு விலை குடியிருப்புகள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் செலவீனங்களை குறைக்க உலக பெருங்கோடீஸ்வரர் எலான் மஸ்கை தலைமையில் தனி திட்டக்குழு ஒன்றை உருவாக்குவேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.