புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கடந்த புயல் மற்றும் வெள்ளத்தின் போது வழக்கமாக வழங்கப்பட்டு வந்த பேரிடர் நிதியை மட்டும் மத்திய அரசு வழங்கியது, கூடுதல் நிதி எதுவும் வழங்கவில்லை. இந்த முறையாவது தமிழக முதல்வர் கேட்ட நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்கும் என நம்புகிறோம்.
ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதும் கொடுக்காததும் முதலமைச்சரின் விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது. செந்தில் பாலாஜி சிறை செல்வதற்கு முன்பு அமைச்சராக இருந்தவர். சிறையில் சில காலம் அமைச்சராகவும் இருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்ததில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடவில்லை. வரும் சட்டசபை கூட்டத்தொடரில் டங்ஸ்டன் சுரங்கம் தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம் என்றார்.