சென்னை: சீமானின் வாய்க்கொழுப்பு சீக்கிரம் அடக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு அதிரடியாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் இருவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்கள். இந்த நிலையில் சென்னையில் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, ” முன்னாள் முதல்வர் கலைஞருக்கு எதிராக சீமான் வாய்க்கொழுப்புடன் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த பேச்சு தொடருமானால், அவரின் வாய்க்கொழுப்பு அடக்கப்படும். சீமான் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.