பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை மாற்ற கட்சி தலைமை முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு, கட்சி தலைமை மற்றும் எம்எல்ஏக்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது மனைவி பார்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய ஆளுநர் தவர்சந்த் கெளட் அனுமதி அளித்தார். இதனால், முதல்வர் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.க.வினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே முதல்வர் பதவியை கைப்பற்ற துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா நேற்று மைசூருவில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் கூறியதாவது:-
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகின்றன. என் மீது எந்த தவறும் இல்லை. நீதிமன்றம் மூலம் உண்மையை நிரூபிப்பேன். நான் எந்த பொய்யான அறிக்கையும் கூறவில்லை. முதல்வர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
சிலர் ஊடகங்களில் ஆர்வம் காட்டியதைக் கண்டேன். முதல்வரை மாற்றுவது பற்றி இதுவரை யாரும் பேசவில்லை. முதல்வர் யார் என்பதை கட்சி தலைமை மற்றும் எம்எல்ஏக்கள் முடிவு செய்வார்கள். இந்த விவகாரத்தில் கட்சி மற்றும் எம்எல்ஏக்கள் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாரலிங்க கவுடா மாலி பாட்டீல் கூறுகையில், “கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது சமூக வலைதள பக்கங்களை நிர்வகிக்க ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவிடுகிறார்? இதுவரை எவ்வளவு செலவு செய்துள்ளார்?” என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் அலுவலகம், “முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களை நிர்வகிக்க மாதம் ரூ.53.9 லட்சம் (18 சதவீத ஜிஎஸ்டி வரி உட்பட) செலவிடுகிறார்.
35 பேர் கொண்ட குழு தனது சமூகத்தை நிர்வகிக்கிறது. 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை சமூக ஊடக மேலாண்மைக்காக பாலிசி ஃபிரண்ட்” என்ற நிறுவனம் மூலம் மீடியா கணக்குகள் (எம்சிஏ) என பதிலளித்துள்ளது.