சென்னை: அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழக வேளாண் ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டார்.
வேளாண்மையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டு வருவது குறித்தும், குறைந்த செலவில் பசுமை குடில்களை உருவாக்கி காய்கறி உற்பத்தியை பெருக்குவது குறித்தும், அங்குள்ள அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
தமிழக விவசாயிகள் ஆஸ்திரேலியா சென்று நீர் மற்றும் வேளாண் மேம்பாடு திட்டங்களை கற்று வர வழிவகை செய்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சருடன் சென்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.