சென்னை : பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது திமுக அரசு என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இது முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரும் 14ம் தேதி தமிழக மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், முதல்முறையாக பொருளாதார ஆய்வறிக்கையை அரசு சமர்ப்பிக்கிறது.
அரசின் நிதிநிலை, உள்நாட்டு உற்பத்தி, செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலை, வரும் ஆண்டுகளில் மாநில நிதிநிலை எப்படி இருக்கும் என பல்வேறு தரவுகள் இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெறும்.
பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக அரசின் இந்த பட்ஜெட்டை அனைத்து தரப்பினரும் வெகுவாக எதிர்பார்த்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக விவசாயிகள் தங்களின் கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.