சென்னை : 10 மாவட்டங்களில் சிறுமிகளை பாதுகாக்க அரசு அசத்தல் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், குழந்தைகளின் உளவியல், மனநலம், கல்வி உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்த குமரி, கடலூர், கோவை, ஈரோடு, தேனி, வேலூர், தி.மலை உள்பட 10 மாவட்டங்களில் மதிப்பூதிய அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்படுவர்.
இதற்கான தகுதி, விண்ணப்பிக்கும் முறை குறித்தும் அறிவிக்கப்பட்டு உள்ளது.