புதுடில்லி: மாநில அரசின் உரையை ஆளுநர் வாசிக்க வேண்டும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார். அப்போது, “மாநில அரசின் உரையை வாசிக்க வேண்டும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும் நாட்டின் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை 10 ஆண்டுகளில் நாம் அமைத்திருக்கிறோம். AI என்ற வார்த்தை மிகவும் நாகரீகமாக மாறிவிட்ட இந்த நேரத்தில், இந்தியா இரட்டை AI சக்தியை கொண்டுள்ளது. முதல் AI செயற்கை நுண்ணறிவையும் இன்னொரு AI ஆஸ்பிரேஷனல் இந்தியாவை குறிக்கிறது” எனவும் தெரிவித்தார்.
” கடந்த மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில், நிகழ்ச்சியின் முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்படாததாக ஆளுநர் ஆர். என். ரவி உரையை வாசிக்காமல் கிளம்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.