புதுடில்லி: ஆம் ஆத்மியை டெல்லி மக்கள் அகற்றுவார்கள் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வரும் 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முஸ்தபாபாத் தொகுதியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “மக்கள் இந்த முறை டெல்லியில் 3ஜி அரசாங்கம் நடத்தும் ஆம் ஆத்மி கட்சியை ஜாடு (ஆம் ஆத்மியின் சின்னமான துடைப்பம்) மூலம் துடைத்தெறிய போகிறார்கள்” என கூறினார்.
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.