புதுடெல்லி: சாதிவாரிக் கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த கணக்கெடுப்பு பணி அடுத்த ஆண்டு தொடங்குகிறது தான்.
அடுத்த ஆண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார். இதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டதாக கூறிய அவர், இதன் மூலம் சமூகத்தில் மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டிலுள்ள சாதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இஸ்லாமிய மதத்தில் உள்ள சாதிப் பட்டியலும் கணக்கெடுப்பில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.
2011-ல் எடுக்கப்பட்ட சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பு(SECC) தரவுபடி 46 லட்சத்திற்கும் மேற்பட்ட ஜாதிகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், 1931-ல் ஆங்கிலேயர்கள் எடுத்த கணக்கெடுப்பில் 4,147 ஜாதிகள் தான் இருந்துள்ளன. நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் முக்கிய அங்கமாக மாறியுள்ளது ஜாதிவாரி கணக்கெடுப்பு.