தேனி: தேனி மாவட்ட அதிமுக நிர்வாகி குறிஞ்சி மணி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்ட அதிமுக நிர்வாகி குறிஞ்சி மணி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் செயலாளராக பதவி வகித்து வந்த இவர் தனது கட்சியிலிருந்து விலகுவதாகத் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், அதிமுக ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே 2026 தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி இன்று தேனி மாவட்டத்திற்கு செல்ல உள்ளது கவனிக்கத்தக்கது.