பெரம்பலூர் அருகே மேலமாத்தூரில் நேற்று நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுவரை கூட்டணி அரசு குறித்து எதுவும் கூறவில்லை.
அமித் ஷா மட்டுமே அதை மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி மற்றும் கூட்டணி அரசு குறித்து தெளிவுபடுத்த வேண்டும். பாமக தலைவர் ராமதாஸ் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்துள்ளார்.

இது கூட்டணி தொடர்பான சந்திப்பா என்பது தெரியவில்லை. ஊகத்தின் அடிப்படையில் கருத்து தெரிவிக்க முடியாது. செல்வ பெருந்தக தான் நேரில் சந்தித்ததாக கூறியுள்ளார். பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.
அது குறித்து கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.