சென்னை : அதிமுக எம்எல்ஏக்களுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைகள் சில வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. என்ன தெரியுங்களா?
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
இந்த தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிய உள்ளார். இந்நிலையில், தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்பது குறித்து அதிமுக எம்எல்ஏக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக பேரவையில் அதிமுகவினர் எப்படி செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.