புதுடில்லி: டெல்லி, பீகார் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் வெளியாகி உள்ளது என்று திமுக மக்களவைக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு விமர்சனம் செய்துள்ளார்.
2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பீகாரில் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு பட்ஜெட்டில் பல்வறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பேசிய திமுக மக்களவைக்குழுத் தலைவர் டி. ஆர்.பாலு, “பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்யும் பீகார் அரசுக்கு திட்டங்களை மத்திய அரசு வாரி வழங்கியுள்ளது. டெல்லி தேர்தலை கருத்தில் கொண்டும் பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.