சென்னை: தமிழக பத்திரப்பதிவு துறையில் 20 வகையான பதிவேடுகளுக்கான முத்திரை கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பத்திரப்பதிவு துறையில் 20 வகையான பதிவுகளுக்கு முத்திரைத்தாள் கட்டண உயர்வு ஏழை மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். எனவே, முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறை, வீடு கட்டுவதற்கான ஒப்பந்தம், குத்தகைப் பத்திரம், கொள்முதல், நன்கொடை, செட்டில்மென்ட் என 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
தத்தெடுப்பு, பிரமாணப் பத்திரம், ஒப்பந்தம், சொசைட்டி பதிவு ஆகியவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை கடந்த ஆண்டு பல மடங்கு உயர்த்திய திமுக அரசு, தற்போது பண மதிப்பின் சிறு தொகையின் முத்திரைக் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. பத்திரப் பதிவுக் கட்டணம், மனை வழிகாட்டி மதிப்பு, வீட்டு வரைபட ஒப்புதல் கட்டணம், முத்திரைக் கட்டணம் என அனைத்து வகையான கட்டணங்களையும் மூன்றரையில் உயர்த்திய திமுக அரசால் ஏழை, நடுத்தர மக்களுக்குச் சொந்த வீடு என்ற கனவு முற்றிலும் தகர்ந்துவிட்டது.
எனவே பொதுமக்களை பாதிக்கும் முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெறுவதுடன், பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தாமல் பத்திரப் பதிவுத் துறையின் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.