மதுரை : மதுரையில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் விஜய் பேசும் போது சிங்கம் வேட்டைக்குத்தான் வெளியில் வரும் என தெரிவித்தார். இது அணில்கள் இல்லை தாங்கள் சிங்கம் என சீமானுக்கு விஜய் பதிலடி என கட்சித் தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநாட்டில் பேசிய விஜய், ‘சிங்கம் வேட்டைக்கு தான் வெளியே வரும்’, ‘சிங்கம் பசியோடு இருந்தாலும் கெட்டுப்போன இறைச்சிகளை உண்ணாது’ என தெரிவித்திருந்தார்.
இக்கருத்து நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கானது என தவெகவினர் கூறுகின்றனர். அண்மையில் தாங்கள் புலிகள், அணில்கள் குறுக்கே வர வேண்டாம் என சீமான் தெரிவித்திருந்தார். இது மறைமுகமாக தமிழக வெற்றிக்கழகத்தை குறித்து சீமான் பேசியதாகவே அரசியல் வட்டாரத்தில் செய்திகள் உலா வந்தன.
இதற்கு பதிலடியாகவே தாங்கள் அணில்கள் இல்லை, சிங்கம் என்று தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தெரிவித்துள்ளதாக கட்சித் தொண்டர்கள் கூறுகின்றனர்.
மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.