சென்னை: ‘கொலையாளியே! வெளியே வா! கேரவனுக்குள் ஒளியாதே!’ என்ற ோஷத்துடன் சென்னையில் விஜய் வீடு முற்றுகையிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் 39 உயிர்களை பலி கொண்ட பிரசார கூட்டம் நடத்திய தவெக தலைவர் நடிகர் விஜய்யின் சென்னை பனையூர் வீட்டை முற்றுகையிட்டு இன்று (செப்டம்பர் 28) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூரில் விஜய் நேற்று பிரசாரம் செய்தார். இந்த பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகினர். பிஞ்சு குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 39 பேர் பலியான சம்பவம் இந்தியாவையே உறைய வைத்துள்ளது. இந்த நிலையில் கரூர் பிரசாரத்தை முடித்துவிட்டு தனி விமானம் மூலம் விஜய் சென்னை திரும்பினார். இதனிடையே சென்னை பனையூரில் உள்ள விஜய் வீடு முன்பாக தமிழ் மாணவ மன்றத்தினர் இன்று காலை திடீரென ஒன்று திரண்டனர்.
அப்போது, வெளியே வா! வெளியே வா! கொலையாளியே வெளியே வா! கேரவனுக்குள் ஒளியாதே! கேரவனுக்குள் ஒளியாதே! பதில் சொல்! பதில் சொல்! குழந்தைகளின் உயிர்களுக்கு பதில் சொல்! என்பது உள்ளிட்ட முழக்கங்களுடன் விஜய்யை கண்டித்து கண்டன போராட்டம் நடைபெற்றது. இதனால் சென்னை பனையூரில் பரபரப்பு ஏற்பட்டது.