வேலூர்: தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைகிறதா? என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் புதிய விரிவான மினி பஸ் திட்ட தொடக்க விழா இன்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு 18 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்குவதற்கான ஆணை வழங்கி, கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் கூறியதாவது:-
நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். எந்த காலத்திலும் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் இருந்து வருகிறது. அதுவும் வளர்ந்து வரும் சமுதாயத்தில் குற்றங்கள் நிகழும். ஆனால் அந்த குற்றத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் முக்கியம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மினி பஸ் திட்டத்தால் ஆட்டோ டிரைவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மாற்று திட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க ஆட்சி காலத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கி உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைகிறதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன என அவர் தெரிவித்தார்.