சென்னை : சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இது அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விவகாரம் என்பதால், அரசு ஊழியர் சங்கங்களுடன் எவ்வாறு பேச்சுவார்த்தை நடந்த வேண்டும் என்பது குறித்து முதல்வர் ஆலோசனை வழங்குகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.