தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த ஆடுதுறை பகுதியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ம க ராஜா நினைவு நாளை முன்னிட்டு இரத்ததான மற்றும் மருத்துவ முகாம் ஆகியவை நடந்தது.
ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவர் ஸ்டாலின் முகமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பலர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டது. உடல் நலப் பரிசோதனை உட்பட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.
இதில் சரியான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனர். மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்த பேரூராட்சித் தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டுகளும் தெரிவித்தனர்.