தஞ்சாவூர்: பேராவூரணி அருகே உள்ள, கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரான பொறியாளர் ஆர்.சி.திருச்செல்வம், தான் படித்த பள்ளிக்கு, நன்கொடையாக ரூபாய் 33 ஆயிரத்து 300 மதிப்பிலான கணினியை வழங்கினார்.
அவரது சார்பாக அவரது தந்தையார் ரா.சின்னப்பா தலைமையாசிரியர் (பொறுப்பு) சு.குமரேசனிடம் அதனை நேரில் வழங்கினார்.
இந்நிகழ்வில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கே.இராமமூர்த்தி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கவிதா விநாயகமூர்த்தி, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி சார்பில் நன்கொடையாளருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பள்ளி, நன்கொடை, முன்னாள் மாணவர், கணினி, ஆசிரியர்கள்